மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவாமரத்துபட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சண்முகம் என்பவருடன் சேர்ந்து நேற்று நால்ரோடு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து, சண்முகம் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.