சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்ததால், அங்குள்ள மக்கள் பதறி ஓடினர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் இசக்கிமுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலையில் அவருடைய தம்பி காரில் மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
திருச்சி சென்னை தேசிய பிரதான நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் இருந்து புகை வந்ததை சுதாரித்து இசக்கிமுத்து வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு வெளியேறிய நிலையில், புகை அதிகரித்து கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து மோசமான நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.