சாலையில் திடீரென 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்கமுடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பனங்காட்டங்குடியில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசடிபாலம் அருகே திடீரென 1௦௦ மீட்டர் அளவிற்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாடி கிராமத்திலும் இதேபோல் சாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தடுக்க விரிசல் ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். மேலும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை உடனடியாக சீரமைக்ககோரி அப்பகுதியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.