அமெரிக்காவில் பாரம்பரிய வீட்டை பாதுகாக்க வீடு ஒன்று அப்படியே தூக்கி வைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கடந்த 139 ஆண்டுகால பழமை வாய்ந்த வீடு ஒன்று அடிமட்ட பகுதிவரை பெயர்த்தேடுக்கப்பட்டது .இந்த வீட்டை 482 மீட்டர் தொலைவிலுள்ள ஒரு காலியான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த பழைய வீடானது நகரின் வளர்ச்சிக்கு இணையாக ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால், அந்த வீட்டை இடிக்காமல் நவீன முறையில் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் அதை அலேக்காக தூக்கி எடுத்துச் சென்றனர்.
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது. மிகப்பெரிய சக்கரங்களை கொண்டு இந்த டிரக்கின் மேல் அந்தப் பழைய வீடு வைக்கப்பட்டது. இந்த வீட்டை சாலையில் கொண்டு செல்லப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டனர். இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் இந்த வீடானது பெயர்தெடுக்கப்பட்டு நகர்த்தப்பட்டது.