இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சாலையில் நடப்பதனால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இந்திய ஒற்றுமை பயணம் குறித்து மகாராஷ்டிராவில் உரையாற்றிய அவர், இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் வாகனங்களில் செல்வதில்லை. அவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.
விமானத்திலும் ஹெலிகாப்டரிலும்,சொகுசு வாகனங்களிலும் செல்பவர்களால் அவர்களைப் பற்றி எப்படி புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் சாலையில் நடந்து செல்ல வேண்டும் அப்போதுதான் அனைத்தும் நன்றாக புரியும் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.