Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

திடீரென மயங்கி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் ராமசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமசுப்பு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ராமசுப்புவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசுப்பு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பெருமாள்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |