Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற ஆசிரியர்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை சிவப்பிரகாசம் நகரில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரான ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தென்னூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 17 வயது சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராஜியின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூறியதாவது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விபத்தை ஏற்படுத்திய சிறுவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |