Categories
தேசிய செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமியை… துரத்தி கடித்த 15 தெருநாய்கள்… பதறவைக்கும் சிசிடிவி வீடியோ…!!

உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுமியை 15 தெருநாய்கள் சேர்ந்து கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று தீப்பெட்டி வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த சில தெருநாய்கள் அந்த சிறுமியை பார்த்து குறைத்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி ஓடத் தொடங்கியதால் அருகில் இருந்த சுமார் ப15 தெரு நாய்கள் சிறுமியை விரட்டியுள்ளது.

இதனைஅடுத்து அந்த தெருநாய்கள் அந்த சிறுமியை கடித்துள்ளது. இதனால் அலறிய சிறுமியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து நாய்களை துரத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்பட செய்துள்ளது.

Categories

Tech |