பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அருண்குமார்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரேவதி அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ரேவதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ரேவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேவதியிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது பட்டுக்கோட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஹரிஹரனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.