வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கழனி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் அஜித்குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனால் அஜித்குமாருக்கு லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அஜித்குமார் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் சுரேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து அஜித்குமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அஜித்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.