பேருந்து மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்றுவிளை பகுதியில் அஜின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் தினமும் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று மாலையில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வார். அதன் பின்னர் வில்லுக்குறிச்சி பகுதியில் வேனை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு பேருந்தில் செல்வார். இந்நிலையில் நேற்று காலை அஜின் வழக்கம்போல் வேனை எடுப்பதற்காக வில்லுக்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அஜின் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அஜினை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஜினின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.