காட்டெருமையின் நடமாட்டத்தினால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் கரடி, காட்டெருமை, காட்டு யானைகள், சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் குன்னுர் சாலையில் காட்டெருமை ஒன்று நடனமாடிக் கொண்டிருந்தது.
இதைப்பார்த்த மாணவ – மாணவிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். ஆனால் சில சுற்றுலாப் பயணிகள் காட்டெருமையுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் காட்டெருமை சற்று மிரண்டது. உடனே சுற்றுலா பயணிகள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். எனவே வன விலங்குகள் சாலையில் நடமாடும் போது பொதுமக்கள் யாரும் செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.