Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்றுகொண்டிருந்த மாணவன்…. பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஊத்துபட்டியில் சிவனாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அபிஷேக் தனது நண்பரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமனூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில் உள்ள தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் அபிஷேக் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அப்பகுதி வழியாக தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அபிஷேக் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அபிகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிஷேக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |