Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்ற காட்டு யானைகள்…. அச்சமடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தல்சூர் கிராமத்திற்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டனர்.

இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சில மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். யானைகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் ஹாரன்களை ஒலிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |