மாட்டின் மீது மோதி ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் தபால் நிலைய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் தபால் நிலைய ஊழியரான ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்று விட்டு அம்பை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் சிங்கம்பாறையில் வசிக்கும் பன்னீர் என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை பாப்பாக்குடி அருகே ஆட்டோ இதனை அடுத்து சென்று கொண்டிருந்த போது ரோட்டில் படுத்திருந்த மாடு திடீரென எழுந்துவிட்டது. இதனால் எதிர்பாராதவிதமாக மாட்டின் மீது மோதி ஆட்டோ சாலையில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆண்ட்ரூஸை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஆண்ட்ரூஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.