Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் படுத்து கிடந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுகம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. சிறிது நேரத்தில் எங்கும் நகராமல் பாம்பு சாலையிலேயே படுத்து கொண்டது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்பு சாலையில் படுத்து கிடப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Categories

Tech |