தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் முருகன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் மிருதுளா பார்கவ. இவர் திருச்செந்தூர் சாலையில் தனது மகள் மற்றும் சக காவலர்களுடன் நடைபயிற்சியில் சென்றுள்ளார்.
அப்போது மிருதுளா திடீரென சாலையில் பாய்ந்ததால் ஐயப்ப பக்தர்கள் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். தனது மகள் குறுக்கே பாய்வதை தடுக்கச் சென்ற காவலரும் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஐயப்ப பக்தர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.