Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. உயிர் சேதம் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருதூர் கடைத்தெரு பிரதான சாலை வழியாக கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த 2 மாதங்களாக தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அருகிலுள்ள கடைகளுக்கு தண்ணீர் செல்வதும், சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைவது போன்று அபாயம் ஏற்படுகிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |