சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை கடுமையான வெப்பம் நிலவியது. இதனை அடுத்து மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் பல்லடம் ரோடு சூடாமணி கூட்டுறவு சங்கத்திற்கு எதிரே மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து ஓடியது. சில இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பள்ளி கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே செல்கின்றனர்.