நாம் சாலையில் செல்லும் போது இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக போடப்பட்டிருக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரியலாம், ஒரு சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் தற்போது பல இளைய சமுதாயத்தினரும் விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விதிமுறைகளை தெரிந்து கொண்டும், வாகனம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடிய ஒரு சாதனம் என்பதை புரிந்து கொண்டும் வாகனத்தை ஓட்டினால் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இப்பொழுது சாலைகளின் இடையில் போடப்பட்டிருந்த கோடுகள் எதற்க்காக என்பது குறித்து பார்க்கலாம்.
ரோடுகளில் எப்போதுமே கோடுகளுக்கு இடதுபக்கமாக தான் போக வேண்டும். இந்நிலையில் வலது பக்கத்திலிருந்து வண்டி எதுவும் வரவில்லை என்றால், ரோட்டில் ஒரே கோடாக நீளமாக இல்லாமல் இடைவெளிவிட்டு விட்டு போடப்பட்டிருக்கும் பட்சத்தில் நாம் ஓவர்டேக் செய்து வலது பக்கத்தில் எடுத்து முந்திச் செல்லலாம். இதற்குதான் விடுபட்ட கோடு போடப்படுகின்றது. இடைவெளி இல்லாமல் தொடர் கோடு போட்டிருந்தால் ஓவர்டேக் பண்ண கூடாது.
மஞ்சள் கோடுகள் போட்டிருந்தால் ரொம்ப முக்கியமான தேவை என்றால் வலது பக்கம் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்றால் ஓவர்டேக் பண்ணி கொள்ளலாம். மஞ்சள் கோடு போடுவது எதற்கு என்றால் எங்கெல்லாம் வெளிச்சம் கம்மியாக இருக்குமோ அங்கெல்லாம் வெள்ளை போட்டிக்கு பதிலாக மஞ்சள் கோடு போடப்படுகிறது. இரண்டு மஞ்சள் கோடு ரொம்ப ஆபத்தான பகுதியில்தான் போடப்படுகிறது. அதற்குக் காரணம் என்னவென்றால் கண்டிப்பான முறையில் ஓவர்டேக் செய்யக் கூடாது, ரொம்ப ஆபத்தான இடம் என்பதை குறிக்கிறது. இதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்.