Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் மது பாட்டில்களை அடுக்கி வைத்த நபர்…. எச்சரித்து அனுப்பிய போலீசார்…. பின் நடந்த சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பள்ளிவாசல் தெருவில் கூலி வேலை பார்க்கும் அக்கீம்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சாலையோரம் இருந்த திண்ணையில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது பாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்துள்ளார். இதனை தட்டி கேட்டவர்களிடம் அக்கீம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்து அக்கீமிடம் விசாரித்தனர்.

இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அப்போது காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முத்துக்குமார் என்பவரது தலையில் அக்கீம் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த முத்துக்குமார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அக்கீமை கைது செய்தனர்.

Categories

Tech |