Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்….போலீஸ் விசாரணை….!!!

 மரத்தின் மீது பேருந்து  மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலையநேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  பேருந்தின் மீது செய்யது அலியின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய  பேருந்து  சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட  பயணிகள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |