நபர் ஒருவர் சாலையில் மரம் சாய்ந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்து புயலாக மாறி கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் நகரில் உள்ள சாலையில் நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலை நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பயங்கர காற்று வீசியதால் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
CCTV footage of tree falling on 50 years old man in Triplicane, Chennai.. He was going back home from a tea shop. #cheenai #NivarCylone #NivarUpdate pic.twitter.com/kcqnRZhljJ
— DINESH SHARMA (@medineshsharma) November 26, 2020