சாலையின் குறுக்கே சென்ற காரின் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஹைதராபாத் அருகே கார் ஒன்று சிக்னலின் போது சாலையை கடக்க முயன்று உள்ளது . அப்பொழுது அங்கு வந்த டிப்பர் லாரி காரின் மீது பலமாக மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று அங்குள்ள சந்திப்பில் ரெட் சிக்னல் விழுந்தது தெரிந்தும் சாலையை வலது புறமாக கடக்க முயன்றுள்ளது.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி காரின் மீது பலமாக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன .இதில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.டிப்பர் லாரி ஓட்டுனர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.