சாலையை கடக்க முயன்ற கணவன்-மனைவி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் முத்துசாமி (80) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் (75) ஆகிய இருவரும் வீட்டிற்கு அருகே நெடுஞ்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து முத்துசாமி மற்றும் தங்கம்மாள் மீது மோதியுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தங்கம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது முத்துசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முல்லுகுரிச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.