சென்னை மணலி புதுநகரில் உள்ள ஆண்டார் குப்பம் பகுதியில் சாலையை கடப்பதற்காக பள்ளி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வேகமாக சாலையைக் கடக்க முயன்றதைப் பார்த்த மாணவி அவர் பின்னாடி அவசரமாக செல்ல முயன்றார். அப்போது வளைவில் திரும்ப முயன்ற கண்டெய்னர் லாரி முன் சக்கரத்தில் அந்த மாணவி சிக்கி கால் முறிந்தது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மணலி புதுநகர் பகுதியில் வரைமுறையின்றி கண்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன என்று புகார் அளித்துள்ளனர். மேலும் போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட காவல்துறையினர் கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்தை சீர் படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.