Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மான்…. வாகனம் மோதியதால் விபரீதம்…. வனத்துறையினர் செய்த செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த மானை மீட்டு வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோரையாறு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 வயது ஆண் மான் ஒன்று பலத்த காயமடைந்த நிலையில் சாலையோரம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற வன செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விபத்தில் காயமடைந்த மானை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் மானுக்கு சிகிச்சை அழிக்கபப்ட்டு மீண்டும் பத்திரமாக வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |