சித்தூர் மாவட்டம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து மோதியதால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சித்தூர் மாவட்டம் வீர கோட்டகுப்பம் நெடுஞ்சாலையில் குப்பம் மண்டலம் கிராமத்தில் கோவிந்தப்பா என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார். அவர் இன்று அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர் மீது பயங்கரமாக மோதியது.
அதனால் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.