Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை மேலவெளியில் பெரியார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியார் வண்டாம்பாளை பிரதான சாலையை கடக்க முயன்ற போது யாசர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பெரியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |