திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கன் பாலம் பகுதியில் நாச்சியம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி முக்கன்பாலம் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மூதாட்டி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூதாட்டி மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.