Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற வாலிபர்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

சாலையை கடக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான இளவரசன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் இளவரசன் கையேந்திபவனில் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பு சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலை நடுவே தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பம் பக்கத்தில் இருந்த சிறிய இடைவெளி வழியாக சென்றபோது பாதுகாப்பின்றி வெளியே தெரியும்படி இருந்த மின்சார வயரை இளவரசன் மிதித்துவிட்டார்.

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இளவரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இளவரசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |