முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள ஒன்றாறியோ என்ற பகுதியிலுள்ள ஹாமில்டன் என்ற நகரில் கடந்த 9ஆம் தேதி அன்று 80 வயதுடைய முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் முதியவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கார் ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.