வேன் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரான பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.