Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த புள்ளிமான்…. திடீரென நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

கார் மோதிய விபத்தில் காயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி விநாயகர் கோவில் அருகே இருக்கும் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியான குருராஜ் என்பவர் ஓட்டி சென்ற கார் புள்ளி மான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் புள்ளிமானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து குருராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த புள்ளி மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் குருராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |