Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சாலையை சீரமைத்து தர வேண்டும்”…. மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!

சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் நாகொண்டபள்ளி கிராமத்தின் வழியாக செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் அவ்வழியாக செல்வோர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் சாலையை சீரமைக்க கோரி நேற்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது சாலையை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தார்கள். இதன் பின் அங்கிருந்தவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |