Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைத்த விவசாயிகள் – போலீசார் உதவியுடன் பணியை தடுத்த அதிகாரி

தேனி மாவட்டம் போடி அருகே கண்மாய் பகுதிக்கு செல்லும் பாதையை விவசாயிகள் சீரமைத்த போதும் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்ததோடு ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

போடிநாயக்கனூர் அருகே உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் கட்டபொம்மன் கண்மாயில் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த கண்மாய்க்கு செல்லும் பாதை சேதமடைந்தது. இதனை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளே அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி  இயந்திரத்தை கொண்டு 200-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி ஓடை மணல் அள்ளப்படுவதாக கூறி போலீசார் உதவியுடன் அப்பணியை தடுத்து நிறுத்தியதோடு வாகனத்தையும் பறிமுதல் செய்தார். இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி எந்திரத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |