அரசு மருத்துவமனைகளின் மருந்துகள் குளத்தின் அருகில் கொட்டிக்கிடந்தன .
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் சாலையோரமாக கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜமீன் ஊத்துக்குளி, கிருஷ்ணா குளத்தின் அருகே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மருந்துகள் சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்தன.
காலாவதி தேதி முடிவடையாத அந்த மருந்துகள் குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருந்துகளை எடுத்துச் சென்ற நிலையில் ,அவற்றை அங்கு கொண்டுவந்து கொட்டியது யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது