Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் ஒதுங்கிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் மேலபாதி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் காரில் திருநள்ளாறு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் காருகுடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிகுமார் காரை சாலையோரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த மகாலிங்கம் மற்றும் சுந்தரம் ஆகியோர் மீது மோதி அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்துவிட்டது.

இதில் படுகாயமடைந்த சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் மகாலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கமும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் கார் ஆற்றில் கவிழ்ந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்று  அதிலுள்ள 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த வைதீஸ்வரன் கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |