Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்…. பெண் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மணியை அவரது குடும்பத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மணியை தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் மணி தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் மணியின் மகள்களான ஜெயா(55), விஜயா(53) ஆகியோர் உடன் இருந்தனர். அந்த ஆம்புலன்ஸை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். டெக்னீசியான ராஜாவும் உடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் முத்துதேவன்பட்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து குமார் ராஜா, மணி, விஜயா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கிரேன் மூலம் ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |