Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 30 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூரில் வசிக்கும் 40 பேர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் வெள்ளைகுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாரக்கான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வேன் ஓட்டுநர் மணி மதுபோதையில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |