லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கேரள மாநிலத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர் லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறுமளஞ்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நம்பியாறு பாலத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாற்று வழியில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர். லாரி கவழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.