சாலையோரம் கிடந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல புத்தநேரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பொன்னம்மாள் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது சாலையோரமாக ஒரு கைப்பை கிடந்துள்ளது.
அதில் 26 ஆயிரத்து 380 ரூபாய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பொன்னம்மாள் அந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். மேலும் நேர்மையாக சாலையோரம் கிடந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொன்னம்மாளை அனைவரும் பாராட்டுகின்றனர்.