சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.