கோவை அருகே உள்ள சாலையோர குளத்தில் 7 சிலைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை அருகே உள்ள பேரூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கரையோரம் உள்ள சாலையில் தினமும் பொதுமக்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்வார்கள். அப்பொழுது குளத்தில் சாமி சிலை கிடந்ததை கண்டு மக்கள் வியந்தனர். இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்நிலையில் போலீசார் இது சிலை தொடர்பான வழக்கு என்றும் இதனை பேரூர் தாசில்தார் முத்து குமாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு தகவலறிந்த தாசில்தார் முத்துக்குமார் அங்கு அதிகாரிகளை அனுப்பி வைத்தார். அதிகாரிகள் குளத்தில் கிடந்த 7 சிலைகளை மீட்டெடுத்தனர். இச்சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு மீட்டெடுத்த சிலைகளை தாலுகா அலுவலகத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. இச்சிலைகளில் ஒன்றை கருங்கல்லும் மற்ற ஆறு சிலைகளை உலோகத்தாலும் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு அடி கருமாரி அம்மன் சிலை ஒன்று மட்டுமே கருங்கல்லால் செய்யப்பட்டது. அதேபோல் விநாயகர், கிருஷ்ணர், சரஸ்வதி, மகாலட்சுமி, விஷ்ணு, துர்க்கை ஆகிய சிலைகள் உலோகத்தால் செய்யப்பட்டன என்பதும் தெரியவந்தது.
சிலைகளை பற்றிய உண்மை அறிவதற்காக தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்பிறகுசிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்கின்றன. இந்த சிலைகளை கைப்பற்றிய குளத்தின் அருகே சிவப்பு பை ஒன்று கிடந்தது. அதை மீட்டு போலீசார் அந்தப் பைக்குள் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அணிந்து செல்லும் சிவப்பு நிற மாலை இருந்ததைக் கண்டறிந்தனர். சிலைகள் அனைத்தும் ஏதாவது கோவிலில் இருந்து கடத்தப்பட்டன எனவும் அதனை குளத்தில் வீசியதாகவும் போலீசார் கூறினர்.
மேலும் இது தவிர சாமி சிலைகள் குளத்தில் வீசப்பட்டதுக்கான காரணம் என்னவென்றும் கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் காணாமல் போனதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனைப்போலவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்த ஐந்து நபர்களை போலீசார் கைது செய்தனர். குளத்தில் இருந்து கைப்பற்றிய சிலைகளுக்கும் இந்த ஐந்து நபர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.