தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி சாலையோர கடையில் டீ அருந்தியது பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள டீக்கடையில் தமிழக முதல்வர் தேநீர் குடித்தார்.உடன் அமைச்சர்களும் இருந்தனர். வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் பிரச்சாரத்திற்கு நடுவே சாதாரண தேநீர் கடைகளில் தேநீர் அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.