Categories
சினிமா தமிழ் சினிமா

சாலையோர மக்களுக்கு குக் வித் கோமாளி பிரபலம் செய்த உதவி… குவியும் பாராட்டு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தர்ஷா குப்தா சாலை ஓரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘சாலை ஓரத்தில் உதவும் கரங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சுயமாக நாம் முன்வந்து உதவவில்லை என்றால்… வேறு யார் உதவுவார்கள்? உதவுங்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்’ என பதிவிட்டுள்ளார் . இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |