Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இது உங்களுக்கும் கிடைக்கும்…. மத்திய அரசு அதிரடி…..!!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை வழங்கி வருகின்றது .இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது.அதன்படி நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் 267 லட்சமும், ஊரக வீட்டு வளர்ச்சி திட்டத்தில் 1.67 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதாவது பிரதமரின் வீட்டு வாஸ்து திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் போன்ற ஏழை மக்கள் இந்த திட்டத்தில் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சாலையோர வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |