Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாலையோர ஹோட்டலுக்கு திடீர் விசிட்… ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் சோனு சூட் தனது ரசிகரின் சாலையோரப் ஓட்டலுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .

தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் சோனு சூட்டுக்கு சிலை வைத்து வழிபட்டனர் . இந்நிலையில் நடிகர் சோனு சூட் தனது ரசிகர் ஒருவரின் சாலையோர ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

https://twitter.com/FcSonuSood/status/1342594948772757504

பிரபல நடிகர்கள் ரசிகர்கள் தன்னை நெருங்க விடாமல் விலகி இருக்கும் நிலையில் நடிகர் சோனு சூட் தனது ரசிகரின் உணவகத்திற்கு திடீர் விசிட் அடித்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் ஹோட்டல் வைத்திருக்கும் தனது ரசிகரின் கடைக்கு திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு, அவருக்கு சமைப்பதில் உதவி செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அது மட்டுமின்றி அவருடைய ஓட்டலில் தயாரான உணவையும் சாப்பிட்டு அருமையாக இருப்பதாக கூறியுள்ளார். தற்போது சோனு சூட் தனது ரசிகரின் உணவகத்திற்கு சென்று வந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |