Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை வைக்கக் கூடாது….. அதிரடியாக ஆய்வு செய்த போக்குவரத்து காவல்துறையினர்…..!!!!

சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த  பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் அமைந்துள்ள  முக்கிய சாலைகளில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடை வியாபாரிகள் தங்களது வியாபார பொருட்கள் விளம்பர பலகையை  சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நேற்று போக்குவரத்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் கும்பேஸ்வரர் கோவில் பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரிகள் சாலையின் இருபுறமும் தங்களது கடைகளுக்கு முன்பும்  வியாபார பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி  தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மேலும் இதுபோன்று சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் வியாபாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |