சாலைகளின் நடுவே வைக்கப்பட்ட இரும்பு தகடுகளை அகற்ற வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கொண்டிசெட்டிபட்டி ஏரிக்கரைக்கு அருகே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலைகளை 2 பிரிவுகளாக பிரித்து சாலையின் மையப்பகுதியில் சிமெண்ட் கற்களும் இரும்புத் தகடுகளும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் சாலையோரத்தில் வைக்கவேண்டிய சிமென்ட் கற்கள் மற்றும் இரும்பு தகடுகள் சாலை நடுவே இருப்பது மிகவும் அபாயகரமானது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக இரும்பு தகடுகளை அகற்றிவிட்டு சிமெண்டால் கட்டப்பட்ட சிறிய தடுப்புகள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.